திடீரென்று போட்டியை தன் பக்கம் திருப்பும் ஆற்றல் உடையவர் ஹர்திக் பாண்டியா: தினேஷ்கார்த்திக் புகழாரம்!
இந்திய மற்றும் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் வரும் டி20 உலக கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா இந்தியாவுக்கு முக்கிய பங்கு வகிப்பார் என தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தினேஷ் கார்த்தி, வரும் டி20 உலககோப்பையை இந்தியா வெல்ல பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
மேலும், தற்போதுள்ள அணியில் உள்ள வீரர்களும் அனைவரும் 150 முதல் 200 போட்டிகள் வரை விளையாடிய அனுபவம் கொண்டவர்கள்.
ஆகவே இந்தியா நிச்சயம் அரையிறுதிக்கு தகுதி பெறும். முக்கியமான போட்டிகளில் யாராவது ஒருவர் நின்று ஆட்டத்தை நம் பக்கம் திருப்பி தரவேண்டும், அதை இம்முறை ஹர்திக் பாண்டியா செய்து முடிப்பார் என நம்புவதாக கூறினார்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் சம நிலையை ஏற்படுத்தி இந்திய அணிக்கு முக்கியமான வீரராக உள்ளார்.
மூச்சுவிடும் நேரத்தில் ஆட்டத்தை தம் பக்கம் மாற்றும் திறன் உடையவர் ஹர்திக் பாண்டியா என தினேஷ்கார்த்திக் கூறினார்.
வரும் அக்டோபர் 24 ஆம் தேதி துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் 2021 டி 20 உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது