இந்திய அணிக்கு காத்திருக்கும் பெரிய பிரச்சனை - எச்சரிக்கும் சுனில் கவாஸ்கர்
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் , இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதனிடையே அணியின் சீனியர் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா பந்துவீசாமல் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுக்கும் என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கடந்த சில மாதங்களாகவே காயத்தில் அவதிப்பட்டு வந்த புவனேஷ்வர் குமாரும், ஹர்திக் பாண்டியாவும் தற்போது காயத்தில் இருந்து முழுயாக குணமடைந்துவிட்டதால் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர்.
ஆனால் இருவரிடமும் அவர்களை பழைய ஆட்டம் இல்லை என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா பந்துவீசுவதே இல்லை. அவர் பந்துவீச முடியாவிட்டால் அவருக்கு இந்திய அணியில் இனி இடம் கொடுப்பதே தேவையற்ற செயல் என முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
. ஆல் ரவுண்டர் ஒருவரால் பந்துவீச முடியாது என்ற நிலை வந்தால் அது அணியின் கேப்டனுக்கும் பிரச்சனை தான் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.