ஹர்திக் பாண்ட்யாவால் வேலையை ராஜினாமா செய்யவுள்ள இளைஞர் - ஐபிஎல் போட்டியில் சுவாரஸ்யம்
குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவால் இளைஞர் ஒருவர் வேலையை ராஜினாமா செய்யவுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நவி மும்பையில் நடைபெற்ற குஜராத் - ஹைதராபாத் அணிகள் இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.அதன்படி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 50, அபினவ் மனோகர் 35 எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட ஹைதராபாத் அணியில் கேப்டன் வில்லியம்சன் 57, அபிஷேக் சர்மா 42, பின்னர் நிக்கோலஸ் பூரன் 34 ரன்களும் விளாச அணியின் வெற்றி எளிதானது. இதன்மூலம் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
Hardik takes its serious ??
— ?ηιℓ_?αнυ_❣ (@Anilsahu494) April 11, 2022
and gone 50* not out ?#HardikPandya #SRHvGT pic.twitter.com/3YzwXaMU65
இதனிடையே இந்த ஆட்டத்தின் போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதாவது போட்டியை காண வந்த ரசிகர் ஒருவர் சும்மா இல்லாமல், “ஒருவேளை ஹர்திக் பாண்ட்யா 50 ரன்கள் அடித்து விட்டால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” என தெரிவித்து பதாகையுடன் மைதான கேலரியில் நின்று கொண்டிருந்தார்.
இதனை எதேச்சையாக கவனித்த கேமராமேன் அப்படியே உலகமெங்கும் போட்டியை காணும் ரசிகர்களுக்கு போட்டுக் காட்டினார். ஆனால் அந்த நபரின் எண்ணைத்தை உறுதி செய்யும் வகையில் பாண்ட்யா 50 ரன்கள் அடித்தார். இதனால் ஹர்திக் பாண்ட்யா சொன்னதை செய்து விட்டார்.. நீங்கள் எப்போது என அந்த இளைஞரை கேள்வி கேட்டு நெட்டின்சன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.