கண்ணீர் விட்ட மனைவி... கட்டியணைத்து ஆறுதல் சொன்ன ஹர்திக் பாண்ட்யா - வைரல் வீடியோ உள்ளே

Hardik Pandya Gujarat Titans IPL 2022
By Petchi Avudaiappan May 30, 2022 07:08 AM GMT
Report

ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 

கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. அஹமதாபாத் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

குஜராத்தை சிறப்பாக வழிநடித்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு மழையில் நனைந்து வரும் நிலையில் இறுதி போட்டியை காண ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா வந்திருந்தார். போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்ற பிறகு மைதானத்தில் நின்று இருந்த ஹர்திக் பாண்டியாவை அவர் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஆனந்த கண்ணீர் விட்டார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.