ரோகித்திடம் ஆதரவு காட்டிய வீரர் - அணியில் இருந்து நீக்கிய ஹர்திக்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Hardik Pandya Rohit Sharma Mumbai Indians
By Karthick Apr 25, 2024 10:08 AM GMT
Report

மும்பை அணிக்குள் சலசலப்புகள் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவருகின்றன.

மும்பை அணி

ஹர்திக் பாண்டியா கேப்டனாக பதவியேற்றது முதல் மும்பை அணி தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வருகின்றது. ரசிகர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் விளையாடி வரும் அந்த அணி இது வரை விளையாடிய 8 போட்டிகளில் 3'இல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

hardik-removes-player-supoorting-rohit-in-match

தொடர்ந்து சிறப்பாக விளையாட அந்த அணியின் வீரர்கள் தவறி வருகிறார்கள். ரோகித், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் என பேட்ஸ்மேன் ஒரு போட்டியில் ஆடினால், அடுத்த போட்டியில் சொதப்பி விடுகிறார்கள். இதுவே அந்த அணிக்கு பெரும் சோதனையை கொடுக்கிறது.

அம்பானி குடும்பத்தின் எச்சரிக்கை - அதிர்ந்த ஹர்திக்!! விஸ்வரூபம் எடுக்கும் சர்ச்சை

அம்பானி குடும்பத்தின் எச்சரிக்கை - அதிர்ந்த ஹர்திக்!! விஸ்வரூபம் எடுக்கும் சர்ச்சை

இனிவரும் போட்டிகள் அனைத்துமே மும்பை அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையிலும், அணிக்குள் புகைச்சல் இருப்பதாக கூறப்படுகிறது. மும்பை அணியில் ஆகாஷ் மத்வால், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் அணிக்கு வெற்றி தேடி தந்தார்.

hardik-removes-player-supoorting-rohit-in-match

ஆனால், அவர் அப்போது ஃபில்டிங் செட் செய்த போது, முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவிடமே ஆலோசனை செய்ததும் அருகில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவை கண்டுக்காமல் நின்றிருந்த வீடியோவும் சமூகவலைத்தளத்தில் வைரலாகின.

hardik-removes-player-supoorting-rohit-in-match

அவர், ரோகித் சர்மாவிற்கு விசுவாசமாக இருப்பதாக பலரும் பேசத்துவங்கிய நிலையில், கடைசியாக நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து ஆகாஷ் நீக்கப்பட்டிருந்தார். இது, ஹர்திக் பாண்டியாவின் செயல் தான் பலரும் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.