பாலிவுட்டின் பிரபல நடிகரை காதலித்த ஹர்திக் பாண்டியா மனைவி - இப்படி ஒரு காதல் கதையா?
மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா கடும் விவாதிக்கப்படும் நபராகவே உள்ளார்.
ஹர்திக் பாண்டியா
ஐபிஎல் தொடரில் அறிமுகமான சில போட்டிகளிலேயே தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தார் ஹர்திக் பாண்டியா. சிறிது காலத்திலேயே இந்தியா அணிக்காக தேர்வான அவர், இந்திய அணியாகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தார்.
டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஆல் ரவுண்டராக தடம் பதித்துள்ள ஹர்திக் பாண்டியா, தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகின்றார்.
மனைவி
இவர், கடந்த 2020-ஆம் ஆண்டு பாலிவுட் நடிகையான Nataša Stanković என்பவரை மணந்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. செர்பியா நாட்டில் பிறந்த இவர், மும்பையில் பிரபலமான மாடலாக இருந்து பின்னர் பாலிவுட்டில் 2013-ஆம் ஆண்டு சத்யாகிரக என்ற படத்தில் பாடல் ஒன்றில் தோன்றி அறிமுகமாகினார்.
தமிழிலும் விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி படத்திலும் ஒரு பாடலுக்கு நடாஷா நடனமாடியுள்ளார். தொடர்ந்து, ஹிந்தி பிக் பாஸ் சீசன் 8'இல் தோன்றியவர், ஆக்ஷன் ஜாக்சன், Fukrey returns போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர், பாலிவுட்டில் பணியாற்றிய போது, அலி கோனி என்பவரை டேட்டிங் செய்துள்ளார். நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, நடாஷாவிற்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது அதே போல, சாம் மெர்ச்சண்ட் என்பவரையும் அவர் டேட் செய்துள்ளார்.