ஹர்திக் பாண்டியா ஒரு அற்புதமான கேப்டன் - லட்சுமண் புகழாரம்..!

Hardik Pandya Cricket Indian Cricket Team
By Nandhini Nov 17, 2022 11:02 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா ஒரு அற்புதமான கேப்டன் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் லட்சுமண் புகழாரம் சூட்டியுள்ளார்.

டி20 கிரிக்கெட் தொடர் - இந்தியா -

நியூசிலாந்து இடையிலான முதலாவது T20 உலக கோப்பை போட்டி நாளை வெலிங்டனில் நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை டி20 தொடருக்குப் பின்னர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறும் வீரர்களின் பெயர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த உலக கோப்பை T20 தொடர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியில் இடம் பெறும் வீரர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டது.

hardik-pandya-vvs-laxmanindian-cricket-team

லட்சுமண் புகழாரம்

இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா ஒரு அற்புதமான கேப்டன் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் லட்சுமண் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நாம் சுதந்திரமாக, அச்சமின்றி விளையாடுவது மிக முக்கியம். போட்டியின் சூழ்நிலையை மனதில் வைத்துக் கொண்டு யுக்திகளை உருவாக்க வேண்டும்.

அதிகமான பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்றால், டாப் ஆர்டர் வீரர்களில் சுதந்திரமாக நெருக்கடி இன்று தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். ஹர்திக் பாண்ட்யா அற்புதமான கேப்டன்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் என்ன செய்தார் என்பதை நாம் பார்த்தோம். அயர்லாந்தில் இருந்து அவரிடம் குறிப்பிட்ட நேரத்தை செலவழித்துள்ளேன். வீரர்கள் அவரை நம்புகிறார்கள். அவர் முன்மாதிரியாக வழி நடத்துகிறார் என்றார்.