பேட்டிங்கில் ஹர்திக் பாண்ட்யா ரொம்ப முக்கியமானவர்: விராட் கோலி

Hardik Pandya Virat Kohli T20 World Cup
By Thahir Oct 24, 2021 08:54 AM GMT
Report

டி-20 போட்டிகளில், ஹர்திக் பாண்டியா 6 வது வரிசை பேட்டிங்கில் முக்கியமானவர் என்று விராத் கோலி தெரிவித்தார்.

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இன்று நடக்கும் போட்டியில், இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளான போட்டி என்பதால் கண்டிப்பாக அனல் பறக்கும் என்கிறார்கள். இந்தப் போட்டியில், ஹர்திக் பாண்ட்யா 2 ஓவர் பந்து வீசுவதற்கு ஏற்ப உடல்தகுதியை மேம்படுத்தி இருக்கிறார் என்று கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சிறப்பான அணியாக இருக்கிறது. அவர்களுக்கு எதிராக ஆடும்போது, மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சு குறித்து கேள்வி எழுகிறது. அவர் இரண்டு 2 ஓவர் பந்து வீசுவதற்கு ஏற்ப உடல்தகுதியை தயார்படுத்தி இருக்கிறார்.

ஆறாவது வரிசை பேட்டிங்கில் பாண்ட்யா முக்கியமானவர். அந்த வரிசைக்கு அவரை போன்று பங்களிப்பு அளிக்கக் கூடிய வீரரை ஒரே இரவில் உருவாக்கி விட முடியாது.

ஐ.பி.எல். தொடருடன் ஒப்பிடும் போது உலகக் கோப்பை போட்டிக்கான ஆடுகளங்கள் சிறப்பானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.