தன் மகனை நினைத்து உருகிய ஹர்திக் பாண்டியா... ஏன் தெரியுமா? வைரலாகும் வீடியோ..!

Hardik Pandya Viral Video
By Nandhini Oct 11, 2022 07:36 AM GMT
Report

தன் பிறந்தநாளில் மகனை நினைவுகூர்ந்த ஹர்திக் பாண்டியா, டுவிட்டரில் மகனுடன் விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் வலம் வருபவர் ஹர்திக் பாண்டியா. இவருக்கு இன்று 29-வது பிறந்தநாள். தற்போது ஹர்திக் பாண்டியா ஐசிசி டி-20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹர்திக் பாண்டியா தன் பிறந்தநாளில் மகனை நினைவுகூர்ந்துள்ளார்.

hardik-pandya-viral-video

மகனை நினைவுகூர்ந்த ஹர்திக் பாண்டியா

இந்நிலையில், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பிறந்தநாளையொட்டி தனது மகனுடன் விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், என் பிறந்தநாளில் என் பையனை காணவில்லை... எனக்கு கிடைத்த சிறந்த பரிசு... என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹர்திக் பாண்டியாவிற்கு அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியா 1993ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி குஜராத்தின் சோரயாசி கிராமத்தில் பிறந்தார். மிகக் குறுகிய காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் முக்கிய அங்கமாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.