சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி - தமிழ் முறைப்படி ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ஹர்திக் பாண்டியா
ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 130 ரன்கள் எடுத்திருந்தது.131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று விளையாடிய குஜராத் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் புதிய அணியாக ஹர்திக் பாண்டியா தலைமையில் களம் இறங்கிய குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

வந்து முதல் ஆண்டிலேயே கோப்பையை கைப்பற்றிய நிலையில் குஜராத் அணியின் வீரர்கள் அதை உற்சாகமாக கொண்டாடினர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சக வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

இதன் முன்னதாக வெற்றி பெற்ற நிலையில் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தமிழ் முறைப்படி இரு கைகளையும் உயர்த்தி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் வெற்றி பெற்ற பின் அனைத்து வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் மைதானத்தை விட்டு வெளியேறினர்.



அமெரிக்க கடற்படையின் முற்றுகைக் கோடு! ஹோர்முஸ் நிரிணையில் கட்டுப்பாட்டு மண்டலத்தை அமைக்கவுள்ள ஈரான் IBC Tamil
யாழில் இரவு நேரம் இடம்பெற்ற சோதனை : சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட உழவு இயந்திரம் சிக்கியது IBC Tamil