ஹர்திக் பாண்டியா -ல இப்போ எதுவும் முடியாது - பகீர் தகவல் கொடுத்த பயிற்சியாளர் குழப்பத்தில் பிசிசிஐ!
ஹர்திக் பாண்ட்யாவின் உடல் நிலை குறித்து மும்பை அணி பயிற்சியாளர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஐபிஎல் தொடரின் 2வது பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் புள்ளிப்பட்டியலின் 4வது இடத்திற்காக கடும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அனைவராலும், கூர்ந்து கவனிக்கப்பட்டு வரும் அணி மும்பை இந்தியன்ஸ் தான் ஆகும்.
அந்த அணி சரிவில் இருந்து மீண்டு வருகிறது. ஐபிஎல் தொடரின் 2வது பகுதியில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்விகளை சந்தித்து 4வது போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது மும்பை அணி.
இந்த நிலையில் மும்பை அணியின் இந்த நிலைக்கு காரனமாக பார்க்கப்படுபவர் ஹர்திக் பாண்ட்யா தான். இவரின் பந்துவீச்சு தான் ரசிகர்களுக்கு கவலையளிக்கிறது.காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்ட்யா கடந்த இரண்டு வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் பந்து வீசவில்லை.
ஆகவே மும்பை அணி வெறும் 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே நம்பியிருக்கிறது.இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்ட்யா குறித்து பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில், ஹர்திக் பாண்ட்யாவின் உடல்தகுதி சரிவர இல்லை. அவர் இந்தாண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் பந்துவீச மாட்டார். அவருக்கு பந்துவீச அழுத்தம் கொடுத்தால், அவரால் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் தற்போது பிசிசிஐ க்கு அதிர்ச்சியினை கொடுத்துள்ளது, காரணம் ம்டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்ட்யா மீது நம்பிக்கை வைத்து பிசிசிஐ சேர்த்துள்ளது. தற்போது ஹார்த்திக் பாண்ட்யாவின் நிலை பின்னடைவாக bcci கருதுகிறது.
இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர். இது ஒரு துரதிஷ்டவசமானது. டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் தான் இந்தியாவின் கீ ப்ளேயர். முக்கியமான போட்டிகளில் அவரை பந்துவீச அழைக்கவிருந்தோம். ஆனால் உடற்தகுதி பிரச்னைகள் எழுந்துள்ளது.
ஆனால் வலைப்பயிற்சிகள் மூலம் அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவார் என நம்புவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.