இது எனக்கு சந்தோஷமான பிறந்த நாள் இல்லை : ஹர்திக் பாண்டியா சோகம்
இது ஒன்னும் எனக்கு சந்தோஷமான பிறந்த நாள் இல்லை என தனது பிறந்த நாளில் உருக்கமான பதிவு ஒன்றினை பாண்டியா பதிவிட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர மற்றும் நம்பிக்கை நாயகனாக இருப்பவர் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக அதிரடியாக விளையாடி இந்திய அணியில் தனக்கான இடத்தினை உறுதி செய்தவர்.
இன்று அவர் தனது 29வது பிறந்த நாளினை கொண்டாடி வருகிறார். டி 20 உலககோப்பை தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ள இவர், அங்கு இந்திய அணி வீரர்களுடன் தனது பிறந்த நாளினை கொண்டாடினார்.
எனது மகன் இல்லை
அவருக்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்திய அணி வீரர்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். உலகம் முழுவதும் இருந்து தனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் வந்த வண்ணம் இருந்தாலும், அவர் தனது பிறந்த நாளில் தனது மகன் தன்னுடன் இல்லை என்பதை மிகவும் உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் எனது எனது உலகமான எனது மகன் என்னுடன் இல்லாதது மகனை மிஸ் செய்வதாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும், எனது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு எனது மகன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.