‘‘எனக்கு இடத்தை கொடுத்துட்டு அவர் தரையில படுத்தார் , தோனி என்னோட அண்ணன்’’ - ஹர்த்திக் பாண்டியா நெகிழ்ச்சி

dhoni hardhikpandya
By Irumporai Oct 19, 2021 07:09 AM GMT
Report

இந்திய அணியின் கேப்டனாக தோனி தலைமை வகித்த 2016-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானவர் ஹர்திக் பாண்டியா.

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராகவும், ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் ஹர்திக், டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

இந்த உலகக்கோப்பையில் தோனி இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் நிலையில், தோனியுடன் தான் இருந்த அனுபவ்ங்களை ஹர்திக் பகிர்ந்த அனுபவங்கள் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தோனி குறித்து ஹர்த்திக் பாண்டியாஅளித்துள்ள பேட்டியில்: என்னைப் பற்றி மாஹிக்கு நன்றாக தெரியும்.

அவரால் மட்டுமே என்னை சாந்தப்படுத்த முடியும். என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத சம்வங்களின்போது எனக்கு ஒரு ஆதரவு வேண்டும் என்பதை உணர்ந்து என்னை வழிநடத்தியவர் மாஹி பாய்

. தோனியினை சிறந்த கிரிக்கெட்டராக நான் பார்க்கவில்லை. அவர் என்னுடைய சகோதரர்.

எனக்கு தேவையான சமயங்களில் எனக்கு மாஹி பாய் துணை நின்றிருக்கிறார் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன், அதை மிகவும் மதிக்கிறேன்.

ஒரு முறை நியூசிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, எனக்கு அறை ஒதுக்கப்படவில்லை.

அப்போது, திடீரென ஒரு அழைப்பு வந்தது. அதில், ‘ஹர்திக்கை என்னுடைய அறைக்கு வரச் சொல்லுங்கள். நான் மெத்தையில் உறங்க மாட்டேன். அவர் என்னுடைய மெத்தையில் உறங்கட்டும். நான் தரையில் உறங்கி கொள்வேன்’ என தெரிவிக்கப்பட்டது.

இப்படி, எனக்காக எப்போதுமே மாஹி பாய் இருந்திருக்கிறார்” என ஹர்திக் பகிர்ந்திருக்கிறார். முன்னதாக, நேர்காணல் ஒன்றுக்கான படப்பிடிப்பில் ஹர்திக் இருந்தபோது அவரது மகன் அகஸ்தியா ‘உள்ளே’ புகுந்த வீடியோ வைரலாகி வருகின்றது.