ரோஹித் சர்மாவுக்கு ஆப்பு வைக்க தயரான ஹர்த்திக் பாண்டியா - அணியில் நிலவும் பரபரப்பு
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி தக்கவைக்காத நிலையில் குஜராத் அணியில் கேப்டனாக விளையாடினார். இது மும்பை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெளியேறிய பாண்டியா
மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா விரும்பிய நிலையில் அதற்கு அணி நிர்வாகம் சம்மதிக்காத நிலையில் அணியில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. பின்னர் குஜராத் அணிக்கு கேப்டனான நிலையில் ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்தார்.
இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி களம் இறங்க உள்ளது.
இந்த போட்டிக்கு முன்பாக பேசிய அவர், அடுத்த 20 ஓவர் உலக கோப்பைக்கான பயணத்தை இந்திய அணி இப்போதே தொடங்கிவிட்டதாக தெரிவித்தார்.
அடுத்த 20 ஓவர் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா என்பதை மறைமுகமாக அவர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பு வைக்கும் ஹர்திக்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் மிக மோசமாக விளையாடி தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் சீனியர் வீரர்களை ஓரம்கட்டிவிட்டு இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்த நேரத்திலும் ரோஹித் சர்மா 20 ஓவர் அணியில் இருந்து நீக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்ற தகவலும் பேசப்பட்டு வருகிறது.
ரோஹித் சர்மாவின் தலைமையில் விளையாடி அவரிடம் அனைத்தையும் கற்றுக் கொண்டு தற்போது அவரின் கேப்டன்சிக்கே ஆப்பு வைக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் என்று ரசிகர்கள் கிசு கிசுகின்றனர்.