ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் தொடர தோனி தான் காரணம் - வெளியான ரகசிய தகவல்
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு மகேந்திர சிங் தோனி தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதுகு தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்து வீச முடியாமல் தவித்து வருகிறார்.
இதன் காரணமாக இந்திய அணியின் பந்து வீசவில்லை என்றாலும் பரவாயில்லை இந்திய அணியின் பினிஷேர் ஆக செயல்படுங்கள் என்று ஹர்திக் பாண்டியா இந்திய அணி தேர்ந்தெடுத்தது.
ஆனால் ஹர்திக் பாண்டியா அந்த வேலையையும் ஒழுங்காகச் செய்யவில்லை,ஆனால் ஹர்டிக் பாண்டியா 100% தகுதியோடு இருக்கிறார் என்று இந்திய அணி தெரிவித்திருந்தது,
இதன் காரணமாக கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடத்தில் ஹர்திக் பாண்டியா கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
ஆனால் இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா இணைந்ததற்கு தோனி தான் முக்கிய காரணம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
2021 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா பந்து வீசவும் திணறுகிறார் மேலும் சிறப்பாக செயல்படவில்லை என்ற காரணத்திற்காக இந்திய அணித் தேர்வாளர்கள் அவரை நீக்கி விடலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தனர்,
ஆனால் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள தோனி தான் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு உதவலாம் என்று பண்டியாவை இந்திய அணியில் தேர்ந்தெடுக்கும்படி வேண்டுகோள் வைத்தார் என்ற தகவல் நம்பிக்கையான நபர்கள் மூலம் வெளியாகியுள்ளது.
ஆனால் உடற் தகுதியை நிரூபிக்க ஹார்திக் பாண்டியாவை ஏன் இந்திய அணியில் தேர்ந்தெடுத்தீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சந்தீப் பட்டேல் பத்திரிகையாளர்களின் சந்திப்பின் பொழுது கீழ்க்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் பந்து வீசவில்லை ஆனால் அவர் தகுதியோடு இருக்கிறார் என்று அவரை இந்திய அணி தேர்ந்தெடுத்துள்ளது,
எந்த காரணத்தையும் இந்திய அணி இவரை ஆல்-ரவுண்டராக தேர்ந்தெடுத்துள்ளது என்று இந்திய அணித் தேர்வாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உலக கோப்பை தொடருக்கு முன் ஒரு வீரர் விளையாட வேண்டும் என்றால் அவர் 100% தகுதியாக இருக்க வேண்டும் என்பதை நிரூபித்த பின்பே அணியில் இணைக்க வேண்டும் ஆனால் இந்திய அணி அவ்வாறு செய்யவில்லை என்பதை சந்தீப் பட்டேல் சுட்டிக்காட்திருந்தார்,
மேலும் இந்தத் தேர்வு ஏண் என்று இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேள்வி எழுப்பினார்.
ஆனால் வலை பயிற்சியின் பொழுது ஹர்திக் பாண்டியா பந்துவீச தொடங்கிவிட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.