Tuesday, May 13, 2025

Wow... ஹர்திக் பாண்டியாவுடன் மாஸா டான்ஸ் ஆடின எம்.எஸ்.தோனி - குஷியில் ரசிகர்கள்...!

Hardik Pandya MS Dhoni Viral Video
By Nandhini 2 years ago
Report

ஹர்திக் பாண்டியாவுடன் எம்.எஸ்.தோனி நடனமாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த உலக கோப்பை T20 தொடர் போட்டியில் ஹர்திக் பாண்ட்டியாவும், ஒரு நாள் போட்டிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டனர்.

சமீபத்தில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியரில் நடந்தது. இப்போட்டியில் ஹர்திக் பாண்டிய தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது.

தோனி - ஹர்திக் பாண்டிய மாஸ் நடனம்

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது தனது குடும்பத்துடன் துபாய்க்கு சென்றிருக்கிறார்.

துபாயில் தன் நெருங்கிய நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவிற்கு எம்.எஸ்.தோனி நேற்று தன் மனைவி மற்றும் ஹர்திக் பாண்டியாவுடன் கலந்து கொண்டார்.

அந்த விழாவில், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து எம்.எஸ். தோனி மாஸாக நடனமாடி உள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் வாவ்.. தல.. கலக்கிட்டீங்க... செம்ம சூப்பர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.     

hardik-pandya-ms-dhoni-dance-viral-video