கேப்டனாக அவதாரமெடுக்கும் ஹர்திக் பாண்டியா : வெளியான முக்கிய தகவல்

ipl capitan hardik pandiya
By Irumporai Jan 11, 2022 08:43 AM GMT
Report

15 -வது சீசன் ஐபிஎல் போட்டியில் அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 -வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

அதேசமயம் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய புதிய இரு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் விளையாடுகின்றன.

கேப்டனாக அவதாரமெடுக்கும் ஹர்திக் பாண்டியா  : வெளியான முக்கிய தகவல் | Hardik Pandya Likely To Be Captain

அதன்படி லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் இரண்டு உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக ஒப்பந்தம் செய்துகொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி லக்னோ அணியின் கேஎல் ராகுல் கேப்டனாகவும், ரஷித் கான் ஆகிய இருவரையும் தேர்ந்தெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் புதிய அணியான அகமதாபாத் அணியின் கேப்டனாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த அணியில் ரஷீத் கான், இஷான் கிஷன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.