மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா, பொலார்டு நீக்கம்? ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி 2021 ஐபிஎல் தொடரில் மிகமோசமான முறையில் விளையாடி ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
இதன்காரணமாக வருகிற 2022 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று புது திட்டங்களை மும்பை இந்தியன்ஸ் அணி யூகித்து வருகிறது.
இந்நிலையில் வருகிற 2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி எந்த வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் எந்த வீரரை புதிதாக அணியில் இணைக்கலாம் என்று திட்டம் தீட்டி வரும் நிலையில்
இந்த மூன்று வீரர்களை தான் மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துக்கொள்ளும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கும் 3 வீரர்களை பற்றி இங்கு காண்போம்.
ரோகித் சர்மா சென்னை அணி எப்படி எம் எஸ் தோனி ஓய்வு அறிவிக்கும் வரை கேப்டனாக தனது அணியில் வைத்திருக்கிறதோ,
அதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி ஓய்வு அறிவிக்கும் வரை கேப்டனாக வைத்திருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
என்னதான் ரோகித் சர்மா 2021 ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை என்றாலும், அவர் 2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: வெடிக்கும் போராட்டங்கள் - ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சின் அதிரடி IBC Tamil
