அர்ஷ்தீப் சிங்கின் தொடர் நோ-பால் மீறல்கள்... - கலக்கமடைந்த ஹர்திக் பாண்டியா...! வைரலாகும் வீடியோ...!
அர்ஷ்தீப் சிங்கின் தொடர் நோ-பால் மீறல்களால், மைதானத்தில் கலக்கமடைந்த ஹர்திக் பாண்டியாவின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி -
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
நேற்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது.
இப்போட்டியின் இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்தியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 டி20 தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

அர்ஷ்தீப் சிங்கின் தொடர் நோ-பால் மீறல்கள்
இந்த மாத தொடக்கத்தில் இலங்கை ஆட்டத்தைத் தொடர்ந்து, அர்ஷ்தீப் தொடர்ச்சியான நோ-பால்களை வீசி வருகிறார். இதனால், சமூகவலைத்தளங்களில் அர்ஷ்தீப் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார்.
நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், பவுலிங்கில் இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில், நோ பால் கொடுத்து, 27 ரன்களை விட்டுக்கொடுத்தது அணிக்கு தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கலக்கமடைந்த ஹர்திக் பாண்டியா
அர்ஷ்தீப் சிங் நோ-பால் போட்டதால், கேப்டன் ஹர்திக் பாண்டியா வேதனையில் ஆழ்ந்துப்போனார். மைதானத்தில் ஹர்திக் பாண்டியா கலக்கமடைந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
— Anna 24GhanteChaukanna (@Anna24GhanteCh2) January 28, 2023
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan