நியூசிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் போட்டி - சர்ச்சையாக வெடித்த பாண்டியா அவுட்...!
நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் அவுட்டான சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது.
நேற்று இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் மைதானத்தில் இரு அணிகளுக்கு நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியில் இறுதியில் இந்திய அணி 12 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, இத்தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
பாண்டியாவின் அவுட் சர்ச்சை
நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், டேரின் மிட்செலின் வீசிய 40வது ஓவரின் 4-வது பந்தில், இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா போல்டானதாக அறிவிக்கப்பட்டதில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
கீப்பர் லாதம் கையுறை உரசலில் பைல்ஸ் விழுந்தது டிவி ரீப்ளேவில் தெளிவாக தெரிந்த நிலையில், 3-வது நடுவர் அவுட் என தீர்ப்பு வழங்கியது தற்போது சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.
‘So how’s this out?’- Natasa Stankovic asks Hardik Pandya’s controversial dismissal in 1st ODI against New Zealand https://t.co/kdWgS83lTv pic.twitter.com/kcXmCgANH2
— CrickTale Official (@CricktaleO) January 18, 2023
Out or Not Out?#IndvNz#HardikPandya? pic.twitter.com/lw9DHJXKIF
— मुंबई Matters™✳️ (@mumbaimatterz) January 18, 2023