ஒரே ஒரு ரன் அவுட் தான்..ரூ.40 லட்சத்தை வீணடித்த ஹர்திக் பாண்ட்யா

IPL2022 Hardikpandya TATAIPL GTvRR
By Petchi Avudaiappan Apr 16, 2022 11:49 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

கொல்கத்தா அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியால் ஹர்திக் பாண்ட்யா செய்த தவறால் பிசிசிஐ அதிர்ச்சியில் உள்ளது. 

ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி மோதின. இப்போட்டியில் குஜராத் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இப்போட்டியில் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா செய்த தவறால் பிசிசிஐ அதிர்ச்சியில் உள்ளது. ஆட்டத்தின் 8வது ஓவரின் போது ஃபெர்க்யூசன் வீசிய பந்தை ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மிட் ஆஃப் திசையில் அடித்துவிட்டு, சிங்கிள் எடுக்க ஓடினார். அப்போது ஹர்திக் பாண்ட்யா வீசிய டைரக்ட் த்ரோவால் ரன் அவுட் செய்தார். அவர் வீசிய வேகத்தில் மிடில் ஸ்டம்ப் இரண்டாக உடைந்தது.இதற்காக நடுவர்கள் சில நிமிடம் பதற்றமடைந்தனர்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒரு சாதாரண ஸ்டம்பிற்கா இப்படி என குழப்பமடைந்தனர். ஆனால் உண்மை என்னவெனில் ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்படும் ஸ்டம்ப்களின் விலையை வைத்து ஒரு டி20 போட்டியையே நடத்திவிடலாம். இந்த ஸ்டம்ப்களின் விலை ரூ.40 லட்சம் ஆகும். 

ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு ரன் அவுட் குழப்பங்களை தடுப்பதற்காக உள்ள இந்த ஸ்டம்ப்கள் ஒரு நொடியில் உடைந்து விட்டதற்கு ஏன் பிசிசிஐ அதிர்ச்சியில் உள்ளது என்பது புரிந்திருக்கும்.