மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ஹர்திக் பாண்டியா..!!

Hardik Pandya Rohit Sharma Mumbai Indians
By Karthick Dec 15, 2023 12:40 PM GMT
Report

அடுத்து ஆண்டு நடைபெறவுள்ள IPL போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் IPL தொடரின் அடுத்த சீசன் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அணிகளின் வீரர்கள் trade தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அதில், குஜராத் அணியில் இடம்பெற்றிருக்கும் ஹர்திக் பாண்டியாவின் மாற்றம் தான் பெரும் பேசும் பொருளாக உள்ளது.

hardik-pandya-appointed-as-mumbai-indians-captain

மும்பை அணிக்கு அவர் திரும்புகிறார் என்ற செய்திகளுடன் அவர் வரும் சீசனில் அணியின் கேப்டனாகவே நியமிக்கப்படுவுள்ளார் என்ற செய்திகளும் வேகமெடுத்துள்ளன.

அறிவிப்பு

இந்நிலையில், சில நாட்களாகவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் நியமிக்கப்படுவார் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்நிலையில், இது குறித்து தகவலை அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தானே தெரிவித்துள்ளார்.

hardik-pandya-appointed-as-mumbai-indians-captain

இது எதிர்காலத்திற்கான திட்டமாகும் என்ற அவர், ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2024 சீசனுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார் என்றார் மஹேலா ஜெயவர்தானே. மேலும், ரோஹித் ஷர்மாவின் தலைமைக்காக தாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டு, 2013 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அவரது பதவிக்காலம் அசாதாரணமானது அல்ல” என்று ஜெயவர்த்தனே ரோகித் ஷர்மாவை புகழ்ந்தார்.