வெறும் சீன் தான்!! இனியும் சான்ஸ் கொடுக்க போறதில்ல - திணறும் ஹர்டிக் பாண்ட்யா
மும்பை அணியின் கேப்டன் தொடர்ந்து சொதப்பி வருகின்றார்.
ஹர்டிக் பாண்ட்யா
இந்த ஆண்டு மும்பை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது முதலே ஹர்டிக் பாண்ட்யா கடும் இன்னலை சந்தித்து வருகின்றார். ரசிகர்கள் அவரை விமர்சித்து வருவது ஒரு புறம் என்றாலும், மறுபுறம பேட்டிங் பௌலிங் என இரண்டிலும் அவர் தடுமாறி வருகின்றார்.
ஆல் ரவுண்டரான பாண்ட்யாவின் ஃபார்ம் வரும் உலககோப்பைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அவரிடம் ரசிகர்கள் கெஞ்சி வருகிறார்கள்.
அதே நேரத்தில், மைதானத்திற்குள் வரும் போது, பல விதமான உடற்பயிற்சிகளை செய்யும் ஹர்டிக் பாண்ட்யா விளையாடுவதில் மட்டும் கோட்டை விட்டுவிடுகிறார்.
Mumbai indians downfall under Hardik Pandya we love to see it....!!?#MIvsKKR #Hardikpandya #RohitSharmapic.twitter.com/xaTSvOHRz5
— Ajmul45 (@Ajmul45) May 3, 2024
இதனால் அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. பலரும் இனி ஹர்டிக் பாண்ட்யா ஒரு போதும் கேப்டனாக முடியாது என்றும் விமர்சித்து வருகிறார்கள்.
Captain Pandya doing this in all matches but no runs on the cards ??#IPL2024 #MIvsKKR #T20WorldCup2024 #T20WorldCup24 #HardikPandya #MumbaiIndians pic.twitter.com/kpnlJbA3bN
— பாலாஜி குணசேகரன் (@_Balaji_486) May 3, 2024