"உங்களை எவ்வளவு போற்றினாலும் போதாது" :விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இந்தியா வீரர் ஹர்பஜன் சிங்

நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு இந்தியா கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் விவேக் அதிகாலை 4.30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

தனது திரைப்படங்களில் நகைச்சுவையின் மூலம் மக்களின் மூட நம்பிக்கையை போக்க மிகவும் முயற்சித்தவர் நகைச்சுவை நடிகர் விவேக். இவர் கடந்த நேற்று முந்தைய தினத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு நலமாக இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று குடும்பத்தினரோடு பேசிக்கொண்டிருந்தபோது விவேக் திடீரென மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சி சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவரது மறைவுக்கு இந்தியா கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த ட்விட்டில் அவர் தெரிவித்திருந்ததாவது,

"உங்களை எப்படி போற்றினாலும் அது குறைவாக தான் இருக்கும்.யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் பழமொழி உங்களுக்கும் பொருந்தும் நீங்கள் வாழ்ந்த வாழ்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம்.

பூமி உள்ள வரையில் உன் கலை பேசும் நீ நட்ட மரங்கள் பேசும்" என அந்த ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.   


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்