உம்ரான் மாலிக்... தினேஷ் கார்த்திக் எங்கே? ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை? - ஹர்பஜன் சிங் ஆவேசம்

Twitter Indian Cricket Team Harbhajan Singh Asia Cup 2022
By Nandhini Sep 07, 2022 09:29 AM GMT
Report

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து, அணியின் தேர்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20

துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இரு பிரிவுகளாக 6 அணிகள்

இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவை வீழ்த்திய இலங்கை

நேற்று ஆசிய கோப்பை டி20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - இலங்கை அணிகள் மோதிக் கொண்டன. இலங்கை அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் தோல்வியையடுத்து, ஆசியகோப்பை டி20 தொடரில் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்திய அணி இழந்துவிட்டது.

இந்திய அணியின் தோல்வி குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் கோபத்தில் சமூகவலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

harbhajan-singh-umran-malik-dinesh-karthik

ஹர்பஜன் சிங் டுவிட்

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததும், அணியின் தேர்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், உம்ரான் மாலிக் எங்கே (150 கி.மீ. வேகம்)? . தீபக் சாஹர் அணியில் ஏன் இடம்பெறவில்லை (மிகச்சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளர்)?. வாய்ப்புகள் கிடைக்க இவர்கள் தகுதியற்றவர்களா என்று நீங்கள் கூறுங்கள்? தினேஷ் கார்த்திக்கிற்கு ஏன் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை? ஏமாற்றம்' என பதிவிட்டுள்ளார்.