பாகிஸ்தான் அணியை சும்மா விடமாட்டோம் வச்சு செய்வோம் - கொந்தளித்த ஹர்பஜன் சிங்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார், இது சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகம் எதிர்பார்கப்பட்ட போட்டியான இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி தான் வெற்றி பெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி பாகிஸ்தான் அணியின் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் பரிதாப தோல்வியை தழுவியது.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான இந்த போட்டி முடிந்து இரண்டு நாட்கள் நிறைவடைந்துவிட்டாலும், இந்த போட்டி குறித்தான விவாதங்கள் இன்னும் குறைந்த பாடில்லை.
குறிப்பாக இந்திய அணி பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியின் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை என்ற டாபிக் அதிகமாக பேசப்பட்டு வருகிறது,
மேலும் முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணியின் தோல்வி மற்றும் பாகிஸ்தான் அணியின் வெற்றி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்த போட்டி சமூக வலைதளங்களிலும் பேசு பொருளாக உள்ளது.
இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங் டுவீட் ஒன்று செய்திருந்தார், அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் ஹர்பஜன்சிங் குறிப்பிட்டதாவது, பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது,
இந்த முறை பாகிஸ்தான் அணி இந்திய அணியை எளிதாக வெற்றி பெற்று விட்டது, ஆனால் இதற்கு முன் நாங்கள் 12 முறை உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வென்றுள்ளோம்,
மீண்டும் பாகிஸ்தான் அணியுடன் மோதும் அதற்கான வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மிக சிறந்த முறையில் விளையாடி பாகிஸ்தான் அணியை வெற்றி பெறுவோம் என்று ஹர்பஜன்சிங் அதில் குறிப்பிட்டிருந்தார்.

Puzzle IQ Test: படத்தில் மறைந்திருக்கும் 6 வார்த்தைகள்-12 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Manithan
