யாரு கேப்டன்'னு முக்கியமில்லை..தோல்விக்கு அவரே காரணம் ! ஹர்பஜன் காட்டம்
தற்போதைய மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான நிலைக்கு காரணம் ரோகித் சர்மா தான் மறைமுகமாக சாடியுள்ளார் ஹர்பஜன் சிங்.
கேப்டன் விவகாரம்
மும்பை இந்தியன்ஸ் அணி பெரும் வீழ்ச்சியை இந்த ஆண்டு கண்டுள்ளது. அதற்கு வீரர்களின் சரியான செய்லபாடு இல்லாதது முக்கிய காரணம் என்றாலும், அணியில் முக்கிய பிரச்சனை ஹர்திக் - ரோகித் மோதல் என்பதே வெளியிலேயே தெரிகிறது.
கேப்டன்ஷிப் மாற்றப்பட்டதில் இருந்து மும்பை அணி, அதிகப்படியான விமர்சனங்களுக்கு ஆளானது. அதனை தொடர்ந்து தான், அணி 10-வது இடத்திற்கும் சென்றது.
இந்நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்த நிலையிலும், விமர்சனங்கள் அடங்கிடவில்லை. ஹர்பஜன் விமர்சனம் மும்பை முன்னாள் வீரரான ஹர்பஜன் நேரடியாக ரோகித் சர்மாவை குறிப்பிடலாம் மறைமுகமாக அவரை விமர்சித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நான் விளையாடி இருக்கிறேன். மிகவும் சிறப்பான நிர்வாகம் மும்பை. சிறப்பாக அணியை வழி நடத்தினார்கள். ஆனால், ஹர்திக்கை கேப்டனாக நியமித்து தான் அவர்களுக்கு பிரச்சனையாக முடிந்தது. எதிர்காலத்தைக் சிந்தித்து இம்முடிவினை அணி நிர்வாகம் எடுத்திருக்கலாம்.
ஆனால் வீரர்களால் அந்த முடிவை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. வீரர்கள் ஒற்றுமையாக இருந்தது போல இல்லை. என் பழைய அணி தோல்விகள் எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. இந்த முடிவிற்கான நேரம் இது இல்லாமல் இருந்திருக்கலாம்.
இதில் பாண்டியாவின் தவறு ஒன்றும் இல்லை. குஜராத் அணியை கேப்டனாக சிறப்பாக வழிநடத்தினார். அணியை ஒற்றுமையாக நடத்துவது மூத்த வீரர்களின் கடமை. யார் கேப்டன் என்பது முக்கியமில்லை.