Sunday, Jul 13, 2025

அரசியல் கட்சியில் இணைகிறாரா? ஹர்பஜன் சிங்

Election Political Harbhajan Singh Punjab Innings
By Thahir 4 years ago
Report

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அரசியலில் ஈடுபடப்போகிறார் என்று 2019-ம் பாராளுமன்ற தேர்தலின்போதிலிருந்தே பேசப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் 11-ம் தேதி அவர் பாஜகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அந்த செய்தி உண்மையில்லை என அவர் ட்விட்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது ஹர்பஜன் சிங் கூறியிருப்பதாவது எனக்கு அனைத்து கட்சிகளிலும் ஆட்களை தெரியும்.

நான் கட்சியில் இணைவதாக இருந்தால் முன்கூட்டியே சொல்லிவிடுவேன். பஞ்சாப் மாநிலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் என் எண்ணம்.

அதை அரசியல் மூலமாகவோ, வேறு வழிகளிலோ செய்யலாம். எப்படி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கவில்லை இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியிருந்தார்.