’’ ஹலோ.. உங்க பவுலிங்ல தான் நான் சிக்ஸர் அடித்தேன்’’ - சண்டை போட்டுக்கொள்ளும் ஹர்பஜன் - ஆமிர்; கலவரமான ட்விட்டர்

twitter t20 world cup harbhajansingh mohammadamir
By Irumporai Oct 27, 2021 01:25 PM GMT
Report

இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் பரபரப்பு இருக்கும். இதில் ரசிகர்கள் பெரும்பாலும் சண்டையிட்டுக் கொள்வார்கள். கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற போட்டியும் பரபரப்பை கிளப்பியது. பாகிஸ்தான் இந்தியாவை முதன்முறையாக வீழ்த்த, இந்திய ரசிகர்களில் சோகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், இரு நாடு கிரிக்கெட் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் சண்டை செய்ய தொடங்கினர். இதில் இரு நாட்டு வீரர்களும் சோசியல் மீடியாவில் சண்டை போட்டுக் கொண்டனர், இந்தியா தோற்றது குறித்து பாகிஸ்தான் வீரர் முகம்மது ஆமிர் ஜாலியாக கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், 2010 ஆசியக் கோப்பை போட்டியில் முகமது அமிர் பந்தை அவர் சிக்சருக்கு பறக்கவிட்ட வீடியோவை ட்விட் செய்தார்.

மேலும் ஆதில் ஃபிக்‌ஷர் எனவும் கூறி வம்பிழுத்தார். ஃபிக்சிங் செய்ததற்காக ஆமிர் கான் ஐந்து ஆண்டுகள் பந்துவீச தடை விதிக்கப்பட்டிருந்தை சுட்டிக்காட்டி ஃபிக்‌ஷர் கோ சிக்ஸர் என்று குறிப்பிட்டிருந்தார் அதற்கு ஆமிரோ, 2006ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அப்ரிடி, ஹர்பஜன் வீசிய நான்கு பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் அடித்த வீடியோ மூலம் பதிலடி கொடுத்தார்.

மற்ற பார்மெட்டில் இது நடப்பது பெரிய விஷயமில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே ஹர்பஜன் பந்தை பொளந்துவிட்டார் என ஆமிர் கான் மறுபடியும் வம்பிழுக்க ஒரு கட்டத்திற்கு மேல் சீரியஸானது வாக்குவாதம். ஹர்பஜன் அடுத்த ட்வீட்டில் 2010ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் ஆமிர் வீசிய 2 நோ பால்களை சுட்டிக்காடி பேசினார்.

அதில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் தான் ஆமிர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுபோன்று மாறி மாறி இருவர்களின் ட்விட்டரும் பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.