ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள டி20 உலகக் கோப்பை தொடரின் சிறந்த வீரர்கள் கொண்ட உத்தேச அணி இதுதான்

Harbhajan Singh t20 world cup match team members
By Anupriyamkumaresan Nov 17, 2021 01:11 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் அடங்கிய கிரிக்கெட் அணி ஒன்றை பிக் செய்துள்ளார்.

அதில் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

விளையாட்டுச் செய்திகளை வெளியிட்டு வரும் ஊடக நிறுவனத்துடனான உரையாடலின் போது, தனது அணியை தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன்.

ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள டி20 உலகக் கோப்பை தொடரின் சிறந்த வீரர்கள் கொண்ட உத்தேச அணி இதுதான் | Harbajan Singh Select Team Members

முகமது ரிஸ்வான், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், பட்லர், ஏய்டன் மார்க்ரம், வனிந்து ஹசரங்கா, ஆசிப் அலி, ரவீந்தர ஜடேஜா, ஷஹீன் அஃப்ரிடி, போல்ட், பும்ரா ஆகிய வீரர்கள் ஹர்பஜன் அணியில் உள்ளனர்.

ரஷீத் கான், 12-வது வீரராக இதில் இணைந்துள்ளார். ஹர்பஜனின் அணியில் ஜடேஜா மற்றும் பும்ரா என இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அதே போல பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாமுக்கு அவரது அணியில் இடம் இல்லை.