Monday, May 19, 2025

“அவங்க கழுத்து மேல கத்தி தொங்கிட்டிருக்கு..அப்படி இருந்தும் நல்லா விளையாடினாங்க” - ஹர்பஜன் சிங்

rahane virat kohli pujara india vs sa hanuma vihari harbajan singh comment
By Swetha Subash 3 years ago
Report

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுனில் தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா இருவரும் 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடினர்.

மேலும் அவர்கள் திறமை காரணமாகவே அணியில் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. அதே சமயம் ஹனுமா விஹாரியும் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடினார்.

இந்த நிலையில் சீனியர் வீரர்கள் ரஹானே,புஜாரா குறித்து ஹர்பஜன் சிங் கூறும்போது,

"ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் நடந்த ஒரே நல்ல விஷயம் ரஹானே ஸ்கோர் செய்ததுதான்.இதனால் ரஹானே கேப்டவுன் டெஸ்டில் மீண்டும் வாய்ப்பு பெறுவார்.அதேசமயம் விராட்கோலி அணிக்கு திரும்புவதால் ரஹானே அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இருப்பினும் ரஹானே பெரிய அளவில் ரன்கள் குவிக்க வேண்டும் என விரும்புகிறேன். அதோடு அவரின் அரைசதம், சதங்களாக மாற வேண்டும்.

அதேசமயம் அணியில் சீனியர் வீரர்கள் ரஹானே மற்றும் புஜாரா இருவரின் கழுத்தின் மீது கத்தி தொங்குகிறது. அப்படிப்பட்ட சூழலிலும் இருவரும் நன்றாக விளையாடி உள்ளனர்" என தெரிவித்துள்ளார்.