''பில்லாவும் நீங்கள் தான் ,பாட்ஷாவும் நீங்கள் தான் '' - ரஜினிகாந்திற்கு வித்யாசமான முறையில் வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங்

rajinikanth harbajansingh HBDSuperstarRajinikanth
By Irumporai Dec 12, 2021 07:02 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை நெஞ்சில் வரைந்து, பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் திரையுலகில் ஜாம்பவனாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த்,

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் ரஜினிகாந்த், இதுவரை 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். திரையிலகில் நடித்து வரும், நடிக்க நினைக்கும் இளம் நட்சத்திரங்கள் பலருக்கும் ரோல் மாடலாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி சமூக வலைதளங்கள் முழுவதும் அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் அமர்க்களப்படுகிறது.

திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் , விளையாட்டு வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய அளவில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.  

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரரும், நடிகருமான ஹர்பஜன் சிங், ரஜினியின் புகைப்படத்தை நெஞ்சில் வரைந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள அவர் ;

"என் மாருமேல சூப்பர் ஸ்டார்" 80's பில்லாவும் நீங்கள் தான் 90's பாட்ஷாவும் நீங்கள் தான் 2k அண்ணாத்த நீங்கள் தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த்.. அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்