15 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. தனியாக வரும் சிறுமிகள் தான் டார்கெட்- இளைஞர் பகீர் வாக்குமூலம்!
தனியாக வரும் சிறுமிகளைக் குறிவைத்து 2 இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி தாய் , தந்தை உயிரிழந்த நிலையில் பெரியம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சரியாகப் படிக்கவில்லை என கூறி பெரியம்மா திட்டியதாகத் தெரிகிறது.இதனால் மன வேதனை அடைந்த சிறுமி கடந்த திங்கள் கிழமை காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மாலை வரை வீடு வரவில்லை அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் சிறுமியைப் பார்த்த உறவினர்கள் பார்த்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதன்பிறகு காவல் துறையினர் விசாரித்துள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் தன்னிடம் சிரித்துப் பேசி அழைத்துச் சென்று கோழிப்பண்ணையில் தங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் கிராமத்தைச் சேர்ந்த துரைராசு மகன் பெரியசாமி (19) எலக்ட்ரீசியன் வேலை செய்வதும் தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகினர். 15 வயது சிறுமி சிறுமியின் தோட்டை அடகு வைத்து உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. மேலும் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்து மீண்டும் பேருந்து நிலையத்திற்குக் கொண்டு வந்து விட்டேன் என்று கூறினார்.
அடிக்கடி தனியாக வரும் சிறுமிகளை வெளியில் அழைத்துச்சென்று சந்தோசமாக இருப்பேன் என்று கூறியது விசாரணையில் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.