13 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - ஆசிரியர் கொடூரம்
ஆசிரியர், சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
கேரளா, பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ்(51). இவர் வீட்டில் வைத்து மாணவ-மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வந்தார். இவரிடம் 13 வயது சிறுவன் டியூசனுக்கு வந்துள்ளான். அப்போது அவனிடம் அப்பாஸ் தவறாக நடந்துள்ளார்.
டியூசன் சென்டரிலும், சிறுவனது வீட்டிலும் வைத்து அவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இதனை சிறுவன் தனது பெற்றோரிடம் கூற, அதிர்ச்சியடைந்தவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
30 ஆண்டு சிறை
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி, அப்பாஸ் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை போக்சோ நீதிமன்றம் விசாரணை நடத்தி அப்பாசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
மேலும் அவருக்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த தொகையை சிறுவனுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.