இஸ்லாமியர்களின் புனித தலமான மக்காவில் சமூக இடைவெளியின்றி தொழுகை நடத்த அனுமதி

Saudi Arabia Relaxation Haram Sharif Covid Rule
By Thahir Oct 17, 2021 11:56 AM GMT
Report

இஸ்லாமியர்களின் புனித தலமான மக்காவில் கொரோனா தொற்றால் விதிக்கபட்ட தடைகள் நீக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றின் தாக்கம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் அனைத்து நாடுகளும் தஙகள் வான்வழி எல்களை மூடினர்.

இஸ்லாமியர்களின் புனித தலமான மக்காவில் சமூக இடைவெளியின்றி தொழுகை நடத்த அனுமதி | Haram Sharif Saudi Arabia Relaxation Covid Rule

இதனையடுத்து சவுதி அரேபியாவும் பல்வேறு ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்தது.இதனால் இஸ்லாமியர்களின் புனித தலமான மக்காவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் கஃபா பகுதி சுற்றிலும் தடுப்பூகள் கொண்டு அடைக்கப்பட்டன.இதையடுத்து கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதையடுத்து கஃபா மசூதியில் பக்தர்கள் வழிபட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.மேலும் சமூக இடைவெளியின்றி தொழுகை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் மசூதி பகுதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் எனவும் முகவும் அணிந்திருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பக்தர்கள் சமூக இடைவெளியின்றி தோளோடு தோள் சேர்ந்து நின்று தொழுகலாம் என்ற அறிவிப்பு அந்நாட்டு இஸ்லாமியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.