சக வீரர் கன்னத்தில் முத்தமிட்ட ஆடம் ஜாம்பா... - வைரலாகும் புகைப்படம்...!
சக வீரர் கன்னத்தில் முத்தமிட்ட ஆடம் ஜாம்பா புகைப்படம் வெளியிட்டு, காதல் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சக வீரர் கன்னத்தில் முத்தமிட்ட ஆடம் ஜாம்பா
சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று நம்முடைய அன்புக்குரியவர்களைக் கவுரவிக்கும் நாளாக ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பலர் இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பேக் புக் என்று தங்களுடைய காதலர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், சக நாட்டு வீரர் ஸ்டோய்னிஸின் கன்னங்களில் ஆடம் ஜாம்பா முத்தமிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தைப் பகிர்ந்த அவர் ‘பிக் பாஷ் லீக்’கின் "காதலர் தின வாழ்த்துகள்" என்று ஒரு அன்பான எமோஜியுடன் தலைப்பிட்டார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜாம்பா மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் பிக் பாஷ் 2022-23 இல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
happy valentine's day ? pic.twitter.com/tv5dkKlxi3
— KFC Big Bash League (@BBL) February 13, 2023