2000 நோட்டு என்ற முட்டாள்தனமான முடிவை திரும்பப் பெற்றதில் மகிழ்ச்சி : ப.சிதம்பரம்

P. Chidambaram
By Irumporai May 22, 2023 05:41 AM GMT
Report

கருப்பு பணத்தை பதுக்கி வைக்க மட்டுமே ரூ.2,000 உதவியுள்ளது என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

ப.சிதம்பரம்

ரூ.2000 நோட்டு என்ற முட்டாள்தனமான முடிவை திரும்பப் பெற்றதில் மகிழ்ச்சி என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், சாமானிய மக்களிடம் ரூ.2,000 நோட்டு கிடையாது, 2016-ல் அதை அறிமுகம் செய்தபோதே பொதுமக்கள் அதை நிராகரித்துவிட்டனர்.

2000 நோட்டு என்ற முட்டாள்தனமான முடிவை திரும்பப் பெற்றதில் மகிழ்ச்சி : ப.சிதம்பரம் | Happy To Get Back 2000 Note P Chidambaram

வரவேற்கும் வகையில் உள்ளது

அதை பயன்படுத்தி வந்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும். கருப்பு பணத்தை பதுக்கி வைக்க மட்டுமே ரூ.2,000 உதவியுள்ளது. ரூ.2,000 நோட்டை மாற்ற எந்த ஆவணங்களும் தேவையில்லை என வங்கிகள் அறிவித்துள்ளன. இது கருப்பு பணம் வைத்திருப்பவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் வகையில் உள்ளது.

7 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.2,000 நோட்டு என்ற முட்டாள்தனமாக முடிவை திரும்ப பெற்றதில் மகிழ்ச்சி. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த அடையாளமும், படிவங்களும், சான்றுகளும் தேவையில்லை என்று வங்கிகள் தெளிவுபடுத்தியுள்ளன. கறுப்புப் பணத்தை வெளிக்கொணரவே 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்ற பா.ஜ.க.வின் முடிவு முறியடிக்கப்பட்டது. கறுப்புப் பணத்தை வேரறுக்கும் அரசின் குறிக்கோளுக்கு இவ்வளவுதான் காரணம் என கூறியுள்ளார்.