"ரஜினிகாந்துக்கு விருது கிடைத்தது தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது" - நடிகர் சத்யராஜ்
நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது தன்னை போன்ற சக நடிகர்களுக்கு மகிழ்ச்சியும், பெருமையும் அளிப்பதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இடியாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.
இதற்காக ரஜினிகாந்த் அவர்களுக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஸ்டைலான நடிப்பால் மக்களை கவர்ந்தவர், தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரையுலக வியாபார மதிப்பை உலகளவில் உயர்த்தியவர்.
தகுதியான கலைஞனுக்கு இந்தியாவின் மிகப்பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது என்னை போன்றவர்களுக்கு மகிழ்ச்சி என நடிகர் சத்யராஜ் தான் வெளியிட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.