‘’ கண்ணே கனியே உன்னை கைவிடமாட்டேன்’’ : பிராமிஸ் டே , உங்கள் காதலை உறுதியாக்க அசத்தலான டிப்ஸ்

promiseday promiseday2022
By Irumporai 9 மாதங்கள் முன்

காதல் ஒரு பட்டர்பிளை போல வரும் வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும், என்ற பாடல் வரிகள் போல காதல் சுகமானதே , அந்த வகையில் பிப்ரவரி 14 ம் தேதி காதலர் தினம் உலகமெங்கும் உள்ள காதலர்களால் கொண்டாடப்படுகிறது.

மேலும், காதலர்கள் தினம் வாரத்தின் ஐந்தாவது நாளாக வரும் இந்த பிராமிஸ் தினம் தான் அந்த காதல் உறவில் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய தொடக்கமாக இருக்கிறது.

இந்த நாளில் உங்கள் காதலன் அல்லது காதலிக்கு கண்ணை பார்த்து நீங்கள் கொடுக்க வேண்டிய வாக்குறுதிகள்

உனக்கு நான் நல்ல நண்பரை (Friendship) போன்று, உனக்கு எல்லாமாகவும் நான் இந்த வாழ்க்கையில் இருப்பேன் என்று சத்தியம் செய்யலாம்.

ஒற்றுமையுடன் வாழ்வதற்காக கடைசிவரை உன்னுடனே ஒற்றுமையுடன் வாழ்வேன் என்று 'ஐ லவ் யூ' என்ற வார்த்தையை அவர் கண்களை பார்த்து கூறலாம். (காதல்களில் கண்கள்தான் அதிகம் பேசும் என கவிஞர்கள் கூறுகின்றனர்)

 காதலர்கள் மட்டுமல்லாமல் திருமணமானவர்களும் தங்கள் பாட்னரிடம் என்ன நடந்தாலும் உன்னை விட்டு பிரிய மாட்டேன். என்னை நம்பி வந்தால் உன்னை வாழ்க்கையின் வரமாகப் பார்த்துக்கொள்வேன் என்று வாக்குறுதி அளிக்கலாம்.

 உனக்கு கடினமான எந்த சூழ்நிலை வந்தாலும், நான் உன்பக்கம் உனக்கு ஆதரவாக (Support) இருப்பேன். உன்னை எப்போதும் கைவிட மாட்டேன். உன் விருப்பம் போல நடந்து கொள்வேன். எந்த சூழ்நிலையிலும் உன் மனதை காயப்படுத்த மாட்டேன். உன்னை புரிந்து கொள்ள முயற்சி செய்வேன் எனக் கூறலாம்.

என்னை ஊக்குவிக்க நீ இருந்தால் இந்த வானமே நம் வசம் 

இதுவே என் வாழ்வின் லட்சியம் என்று உங்கள் காதலரிடம் வாக்குறுதிகளை வழங்குங்கள். மேலே சொன்னவை உங்கள் காதலை மேலும், உறுதியாக்க உதவியாக இருக்கும். மேற்கண்ட வசனம் மட்டும் அல்ல உங்களின் உண்மைய அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்துங்கள் அது உங்கள் பாட்னரை சந்தோஷப்படுத்தும்