அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி!

Silver Gold
By Vinoja Jun 19, 2026 06:34 AM GMT
Report

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வுகள் பதிவாகி வரும் நிலையில், இன்று (ஜூன் 19) தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.  இந்த திடீர் சரிவு, முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்கத் திட்டமிட்டிருப்போருக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.

ஜூன் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலையில் சரிவு காணப்பட்டு வருகிறது. குறிப்பாக மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை குறைந்து நகை வாங்குவோருக்கு நம்பிக்கையையும் மகிழை்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி! | Happy News For Lovers Gold And Silver Rate Today

அதேபோல் நேற்று (ஜூன் 18) காலை நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.14,030 ஆகவும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,240 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்

இந்த நிலையில் இன்று (ஜூன் 19) தங்கம் விலை மேலும் அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.380 குறைந்து ஒரு கிராம் ரூ.13,570 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி! | Happy News For Lovers Gold And Silver Rate Today

சவரனுக்கு ரூ.3,040 குறைந்துள்ளதால், ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,560 என்ற விலைக்கு கிடைக்கிறது. மேலும், 18 காரட் தங்கத்தின் விலையும் கணிசமான குறைந்துள்ளது.

ஒரு கிராமுக்கு ரூ.310 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,350 ஆகவும், சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ஒரு சவரன் ரூ.90,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி! | Happy News For Lovers Gold And Silver Rate Today

இதனுடன், வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து ரூ.255 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.