தல இடத்தை மிஞ்ச யாருடா? மாரை தட்டி கொள்ளும் ரசிகர்கள்! தல தோனி பிறந்த தினம் இன்று!
இந்திய கிரிக்கெட்டின் இந்த நூற்றாண்டின் ஈடில்லா, இணையில்லா வீரன் கேப்டன் கூல் தோனியின் பிறந்த தினம் இன்று.
அப்படி என்ன செய்துவிட்டார் ராஞ்சியின் ரகளையான இந்த வீரன்..?
வாருங்கள் மாஹியின் என்னும் சகாப்தத்திற்குப் பின்னிருக்கும் குட்டி ஸ்டோரியை காண்போம். ராஞ்சியில் பிறந்தார், கால்பந்தில் ஆர்வம் கொண்டவராக இருந்தார் எவ்வாறு கிரிக்கெட்டிற்கு வந்தார் என்பது அவரது பயோபிக் படத்தின் மூலம் நமக்கு தெரியவரும் ஆகவே நேராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் களம் கண்ட படலத்துக்கு வருவோம் இந்திய கிரிக்கெட் அணி சச்சின், டிராவிட், லக்ஷ்மன் என அதிரடி காட்ட சேவாக், கங்குலி, யுவராஜ் எனச் சிலர் மட்டுமே இருந்தனர்.
ஆனால் நீ யார்க்கர் போட்டாலும் சிக்ஸ் அடிப்பேன்டா என நீளமான முடி, ஹெலிகாப்டர் ஷாட் என அதிரடி ஆட்டக்காரராக அணியிலிருந்த தோனியைப் பற்றி அப்போது மக்கள் மனதில் இருந்தது வேறு மாதிரியான பிம்பம். கிரிக்கெட் பற்றி இவ்வளவு தெளிவான புரிதல் தோனிக்கு உண்டு என அப்போது சொல்லியிருந்தால் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள்.
ஆனால், அதை அனைவரும் உணரும் நேரம் சீக்கிரமே வந்தது. 2007 ஒருநாள் உலகக் கோப்பையில் படுதோல்வி அடைந்து முதல் சுற்றிலேயே வெளியே வந்தது இந்தியா.
இந்தியாவுக்கு இப்படி ஒரு நிலையா என ரசிகர் கூட்டம் கொதித்தபோதுதான் தோனி தலைமையில் தென்னாப்பிரிக்கா கிளம்பியது ஒரு இளம்படை. 2007-ல் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு. அங்குதான் ஐபிஎல்லுக்கு விதை போடப்பட்டது. உலகமெங்கும் கிரிக்கெட்டின் முகமாக டி20 மாறியது. அந்த வருடம் இந்தியா ஜெயிக்கவில்லை என்றால் இதெல்லாம் இவ்வளவு வேகமாக நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
அந்த வகையில் கிரிக்கெட் உலகையே தலைகீழாகத் திருப்பிப்போட்டது தோனியின் வருகை எனத் தாராளமாகச் சொல்லலாம். 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற பின் தோனி பேசியது முக்கியமானதுநினைவில் ஒன்று மட்டும் உறுதி. இந்தப் பரபரப்பிற்காகவும், கொண்டாட்டத்திற்காகவும் இந்தியாவில் இந்த ஃபார்மட் தீயெனப் பற்றிக்கொள்ளும்.
நிச்சயம் அங்கு டி20 பெரிய ஹிட்டாகும்" என்று அவர் சொல்லியிருப்பார். இன்னும் சிலநாட்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவிருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவில் டி20 கிரிக்கெட் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 2007-லேயே அந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டை இந்தப் பாதையில்தான் கூட்டிவரும் எனத் தெளிவாக அறிந்திருந்தார் தோனி.
ஒவ்வொரு வெற்றியும் தோல்வியும் இந்திய கிரிக்கெட்டில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அப்போதே தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார். எப்போதும் ஒரு போட்டியைத் தாண்டியதாகவே இருந்தது தோனியின் விஷன்.
அதனால்தான் மிகச்சிறந்த கேப்டன் என்று தோனியை உலகமே கொண்டாடுகிறது. எப்படி எதிர்காலத்திற்கான தெளிவான விஷன் தோனியிடம் உள்ளதோ அதே போல நிகழ்காலத்தில் அந்தக் கணத்தில் இருக்கும் வீரர்களை வைத்து ஜெயிக்க என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தோனிக்கு தெளிவு உண்டு. இப்படி அவர் களத்தில் எடுத்த முடிவுகள் ஏராளம். இந்தியா வென்ற மூன்று ஐசிசி கோப்பைகளின் இறுதிப் போட்டியிலுமே இப்படி ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பார் தோனி.
ஸ்டேடியத்தில் எடுக்கும் முடிவுகள் தொடங்கி பிரஸ் மீட்டில் மீடியாவை அணுகுவது வரை பல வித்தியாசமான வழிமுறைகளைக் கையாண்டிருக்கிறார் தோனி. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதுகூட ஒரு வித்தியாசமான முடிவுதான். மற்ற வீரர்களைப் போல முன்னரே அறிவிக்காமல், திடீரென ஒரு போட்டியின் பிரசென்டேஷனில் அறிவித்து ஓய்வு பெற்றார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை வெறும் இரண்டு வரிகளில் ஒரு இன்ஸ்டகிராம் பதிவில் சொல்லி தன் ரசிகர்களை ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியிருப்பார்.
எளிமையாக ஒரு ஸ்லைடு-ஷோ வீடியோவாக ஒரு பாடலுடன் பதிவிட்டு 'Thanks a lot for your love and support throughout. From 1929 hrs consider me as Retired' என்று ஓய்வை அறிவித்திருப்பார் தோனி.
அந்தப் பாடலின் அர்த்தம் இதுதான் "நான் ஒரு தற்காலிக கலைஞன்தான். இந்தச் சில தருணங்கள்தான் நான் யார் என்ற கதையைச் சொல்கின்றன. எனக்கு முன்பு ஒரு கலைஞன் இருந்தது போல் எனக்கு அடுத்தும் என்னை விஞ்சும் சிறந்த கலைஞன் வருவான்.
'Dhoni Finishes Off in Style!''... அதனால் தான் அவர் கேப்டன் கூல் ..