சுப்மன் கில்லுக்கு பதிலாக மீண்டும் களமிறங்கப்போகும் சீனியர் வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் விலகியுள்ளார்.
இந்திய அணி வரும் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதனிடையே இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கில் விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக கேஎல் ராகுல்,மயங்க் அகர்வால் அல்லது ஹனும விஹாரிக்கு இந்திய நிர்வாகம் வாய்ப்பு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரராக மயங்க் அகர்வால் அல்லது ஹனும விஹாரி விளையாடவே அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் விஹாரிக்கு அதிக அனுபவம் உள்ளதால் அவர் தான் தொடக்க ஆட்டக்காரர் இடத்திற்கு சரியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.