காயத்தையும் பொருட்படுத்தாமல் ஒற்றை கையால் பேட்டிங் செய்து அசத்திய விஹாரி... - குவியும் பாராட்டு...!

Cricket Viral Video Andhra Pradesh
By Nandhini Feb 01, 2023 12:01 PM GMT
Report

கையில் எலும்பு முறிவு ஏற்பட்டபோதும், காயத்தையும் பொருட்படுத்தாமல் ஒற்றை கையால் பேட்டிங் செய்து அசத்திய விஹாரியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். 

கையில் எலும்பு முறிவு

ரஞ்சிக் கோப்பை கால் இறுதிப் போட்டியில் ஆந்திரா அணியும், மத்திய பிரதேசம் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆந்திரா அணியின் கேப்டன் விஹாரி மைதானத்தில் களமிறங்கி விளையாடத் துவங்கினார்.

இவர் 37 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தபோது, ஆவேஷ் கான் பந்து வீச்சில் அவரது இடது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் விஹாரி 6 வாரங்கள் விளையாட கூடாது என்று தெரிவித்தனர்.

hanuma-vihari-batting-with-left-hand-fracture

ஒற்றை கையால் பேட்டிங் செய்து அசத்திய விஹாரி

விஹாரி வெளியேறியதையடுத்து, ஆந்திரா அணி வீரர்கள் ரிக்கி புய் (149), கரண் ஷிண்டே (110) ஆகியோர் களத்தில் இறங்கி சிறப்பாக விளையானடிர். ஆந்திர அணி 2 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்தது. இவர்கள் அவுட் ஆனபிறகு, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால் 353 ரன்கள் 9 விக்கெட்டுகளை இழந்தது.

இந்நிலையில், விஹாரி மீண்டும் பேட்டிங் செய்ய மைதானத்தில் இறங்கினார். உடைந்த மணிக்கட்டைப் பாதுகாக்க இடது கை பேட்ஸ்மானாக பேட்டிங் செய்தார். அவரது இடது கை முழுவதும் டேப் போடப்பட்டிருந்தது. இருந்தாலும், ஒரு கையை மட்டுமே பயன்படுத்தி விளையாடினார். விஹாரி கிட்டத்தட்ட 10 ஓவர்களில் 26 ரன்களை எடுத்தார். ஆந்திரா 9 விக்கெட்டுக்கு 379 ரன்களுக்கு முன்னேறியது.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் காயத்தையும் பொருட்படுத்தால் துணிச்சலாக ஒற்றை கையில் பேட்டிங் செய்த ஹனுமா விஹாரிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் , ரசிகர்கள் பலர் பாராட்டு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.