2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று உறுதி - ஸ்பெயினின் இந்திய தூதரகம்

India World HantaVirus
By Vinoja May 11, 2026 08:01 AM GMT
Report

நெதர்லாந்து நாட்டின் ஹோண்டியஸ் சுற்றுலா கப்பலில் பயணித்த 2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நலமுடன் இருப்பதாக ஸ்பெயின் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

கடந்த ஒன்றாம் திதகதி சுவிட்சர்லாந்தில் இருந்து ஸ்பெயினுக்கு சென்ற எம்பி ஹோண்டியஸ் என்ற சொகுசு கப்பலில் இருந்த 3 பேர் ஹன்டா வைரஸ் தொற்றால் உயிரிழந்த நிலையில், நடுக்கடலிலேயே குறித்த கப்பல் தனிமைப்படுத்தப்பட்டது.

2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று உறுதி - ஸ்பெயினின் இந்திய தூதரகம் | Hanta Virus Confirmed For 2 Indians

மேலும் கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் ஸ்பெயின் நாட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது கப்பல் குழுவில் பணியாற்றி வரும் 2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று அபாயம் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள ஸ்பெயின்  இந்திய தூதரகம், ஹன்டா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளான இரண்டு இந்தியர்களும் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் கீழ்  இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஹன்டா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளான இரு இந்தியர்களும் நெதர்லாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகம்  தெரிவித்துள்ளது.