1 நிமிஷத்துக்கு 5 லட்சம் வேணும் : மாப்பிள்ளையிடம் பேரம் பேசிய ஹன்சிகாவின் தாய்

Hansika Motwani
By Irumporai 2 வாரங்கள் முன்
Report

 ஹன்சிகா மோத்வானியின் தாய் நிமிடத்திற்கு ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். இந்த தகவல் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹன்சிகா

தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹம்சிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இந்த நிலையில் நடிகை ஹன்சிகா சோஹேல் கதுரியாவை கடந்த டிசம்பர் 4 ,2022 அன்று திருமணம் செய்து கொண்டார்.

1 நிமிஷத்துக்கு 5 லட்சம் வேணும் : மாப்பிள்ளையிடம் பேரம் பேசிய ஹன்சிகாவின் தாய் | Hansika Motwani S Mother 5 Lakh Per Minute

இவர்களின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரண்மனையில் நடைபெற்றது , மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

 ரூ 5 லட்சம்

டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் ஹன்சிகாவின் திருமணம் வெளியாகி வருகிறது. ஹன்சிகாவும் அவரது தாயும் தங்கள் கடந்த காலத்தில் நடந்த பிரச்சனைகளை பற்றியும், அதை சமாளிக்க அவர்கள் எடுத்த முடிவுகள் என தொடங்கி பல ரகசியங்கள் குறித்து பேசியுள்ளனர்.

அதில் ஹனிசிகாவின் தாய் மோனா மோத்வானி மணமகன் சோ ஹோல் கதுரியின் குடும்பத்திடம் நிமிடத்திற்கு ரூ 5 லட்சம் கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஹன்சிகா தாயார் மோனா மோத்வானி, சோஹேலின் அம்மாவை அழைத்து விழாக்களுக்கு தாமதமாக வருவதைப் பற்றி புகார் செய்தேன்.

அது என்னவென்றால், இன்று நீங்கள் தாமதமாக வந்தால், ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். நான் இந்த கோரிக்கையை வைக்கிறேன் என்று கூறினார்.  

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.