வருங்கால கணவரின் முதல் கல்யாணத்தில் கலந்து கொண்ட ஹன்சிகா... - வைரலாகும் புகைப்படம் - ஷாக்கான ரசிகர்கள்

Hansika Motwani Marriage Viral Photos
By Nandhini 4 மாதங்கள் முன்
Report

வருங்கால கணவரின் முதல் கல்யாணத்தில் கலந்து கொண்ட ஹன்சிகாவின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஹன்சிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழில் தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனையடுத்து, ‘எங்கேயும் காதல்’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஹன்சிகா நடித்த ‘மஹா’ திரைப்படம் வெளியானது.

ஜெய்ப்பூர் அரண்மனை

ஹன்சிகாவின் இவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நிர்வகித்து வந்தார் சொஹைல் கதூரியா. வரும் டிசம்பர் 4ம் தேதி ஹன்சிகாவிற்கும், சொஹைல் கதூரியாவிற்கும் காதல் திருமணம் நடக்க உள்ளது.

இந்த திருமணம் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது. ஆடம்பர முறையில் அதிக பொருட்செலவில் இந்த திருமணம் நடைபெற போவதாகவும் சொல்லப்பட்டது.

விவாகரத்தானவர்

ஹன்சிகாவின் வருங்கால கணவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்ற தகவல் தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சொஹைல் கதூரியாவிற்கும், ரிங்கி என்ற பெண்ணுக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களது திருமணம் கோவாவில் நடந்தபோது, இவர்களின் திருமண நிகழ்ச்சியில் ஹன்சிகாவும் கலந்து கொண்டுள்ளார்.

சங்கீத் நிகழ்ச்சியில் ஹன்சிகா டான்ஸ் ஆடியும் உள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. சொஹைல் கதூரியாவின் முதல் திருமணத்தையொட்டி அளிக்கப்பட்ட நீச்சல்குள பார்ட்டி முதல் அனைத்து பார்ட்டிகளிலும் ஹன்சிகா கலந்து கொண்டிருக்கிறார்.

விவகாரத்தான பின்பு, காதல் நகரமான பாரீஸுக்கு அழைத்துச் சென்று ஹன்சிகாவிடம் ப்ரொபோஸ் செய்துள்ளார் சொஹைல் கதூரியா. இதன் பின்னர் அவரின் காதலை ஹன்சிகா ஏற்றுக்கொண்டுள்ளார்.

அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஹன்சிகா.

ரசிகர்கள்

இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இன்னும் சிலரோ, ஹன்சிகா ஏன்... விவாகரத்தானவரை ஏன் திருமணம் செய்து கொள்கிறீர்கள்... என்று மன வருத்தத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Hansika Motwani

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.