விவாகரத்தானவரை திருமணம் செய்தது ஏன்? - முதன்முதலாக மனம் திறந்த ஹன்சிகா...!

Hansika Motwani Marriage
By Nandhini 2 மாதங்கள் முன்
Report

விவாகரத்தானவரை திருமணம் செய்தது ஏன்? என்பது குறித்து முதன்முதலாக மனம் திறந்து ஹன்சிகா பேசியுள்ளார்.

நடிகை ஹன்சிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழில் தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, ‘எங்கேயும் காதல்’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஹன்சிகா நடித்த ‘மஹா’ திரைப்படம் வெளியானது. ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் ஹன்சிகாவின் இவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நிர்வகித்து வந்தார் சொஹைல் கதூரியா. கடந்த மாதம் டிசம்பர் 4ம் தேதி ஹன்சிகாவிற்கும், சொஹைல் கதூரியாவிற்கும் காதல் திருமணம் செய்து கொண்டனர். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெய்ப்பூர் அரண்மனையில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.

hansika-motwani-marriage

முதன்முதலாக மனம் திறந்த ஹன்சிகா

நடிகை ஹன்சிகாவின் திருமணம் நடந்து முடிந்தாலும், ஹன்சிகா திருமணம் செய்து கொண்டவர் ஏற்கெனவே, திருமணமாகி விவாகரத்தானவர். ஹன்சிகாவின் தோழியை தான் சோஹைல் கத்தூரியா முதலில் திருமணம் செய்தார்.

பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்று சென்றனர். இதனையடுத்து, ஹன்சிகாவின் இவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நிர்வகித்து வந்தார் சொஹைல் கதூரியா. இவர்களுடைய நட்பு நாளடைவில் காதலாக மாறி, கல்யாணமும் நடந்து முடிந்து விட்டது.

இந்நிலையில், விவாகரத்தானவரை திருமணம் செய்துகொண்டது ஏன் என்று சமூகவலைத்தளங்களில் அவருடைய ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர்.

இந்தக் கேள்விக்கு மவுனமாக இருந்து வந்த ஹன்சிகா தற்போது அது குறித்து முதல்முறையாக மனம் விட்டு பேசியுள்ளார். நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ ஹாட்ஸ்டாரில் வரும் பிப்ரவரி 10ம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் அதற்கான டீசரில், ஹன்சிகா தனது அம்மாவிடம் பேசுகையில்,நீ தான் எனக்கு அடிக்கடி சொல்லி இருக்கிறாய். யாருடைய கடந்த காலத்தை பற்றி பார்க்கக் கூடாது என்று உனக்கு ஓகே என்றால் எனக்கு அது போதும் என்று கண்கலங்கியபடி ஹன்சிகா பேசி இருக்கிறார். இதில் சோஹைல் கத்தூரியாவின் கடந்த காலத்தை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்பதை ஓப்பனாக சொல்லியுள்ளார் ஹன்சிகா.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.