ஹன்சிகாவிற்கு விரைவில் டும்...டும்..டும்... - மாப்பிளை யார்ன்னு தெரியுமா? வெளியான தகவல்.. - குஷியான ரசிகர்கள்

Hansika Motwani Marriage
By Nandhini 3 மாதங்கள் முன்

ஹன்சிகாவிற்கு விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப்போகும் மாப்பிளை குறித்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை ஹன்சிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழில் தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனையடுத்து, ‘எங்கேயும் காதல்’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஹன்சிகா நடித்த ‘மஹா’ திரைப்படம் வெளியானது.

ஜெய்ப்பூர் அரண்மனை

இந்நிலையில், நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்ய போவதாகவும், இது அவரது குடும்பத்தினர் பார்த்து ஏற்பாடு செய்து திருமணம் என்று தகவல் வைரலாக பரவியது.

இந்த திருமணம் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது. ஆடம்பர முறையில் அதிக பொருட்செலவில் இந்த திருமணம் நடைபெற போவதாகவும் சொல்லப்பட்டது.

hansika-motwani-marriage

ஹன்சிகா திருமணம் செய்யப்போகும் காதலர் 

இந்நிலையில், நடிகை ஹன்சிகாவை திருமணம் செய்யப்போகிறவர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

ஹன்சிகாவின் தன் காதலரான சோஹோம் கதுரியா என்ற பிரபல தொழிலதிபர் திருமணம் செய்யப்போவதாகவும், இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ளப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தியால், ஹன்சிகாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.