கணவர் முன்னிலையில் முன்னாள் காதலரை நினைத்து அழுத நடிகை ஹன்சிகா? - வைரலாகும் வீடியோ...!
நடிகை ஹன்சிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழில் தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனையடுத்து, ‘எங்கேயும் காதல்’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஹன்சிகா நடித்த ‘மஹா’ திரைப்படம் வெளியானது.
ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் ஹன்சிகாவின் இவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நிர்வகித்து வந்தார் சொஹைல் கதூரியா.
கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஹன்சிகாவிற்கும், சொஹைல் கதூரியாவிற்கும் காதல் திருமணம் செய்து கொண்டனர். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெய்ப்பூர் அரண்மனையில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.
முன்னாள் காதலரை நினைத்து அழுத ஹன்சிகா...?
இந்நிலையில், நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 'லவ் ஷாதி டிராமா' என்கிற தலைப்பில் வெளியாக இருக்கிறது.
தற்போது சமூகவலைத்தளங்களில் திருமண வீடியோ டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஹன்சிகா சந்தோசம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், அழுகை என பல உணர்ச்சிகள் நிறைந்த ஒரு திரைப்படம் போல உருவாகி இருக்கிறது.
மேலும், நடிகை ஹன்சிகா தனது கடந்த கால காதல் வாழ்க்கையை பற்றி நினைவுகூர்ந்து உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். ஏற்கெனவே சிம்பு-ஹன்சிகா இருவரும் காதல் உறவில் இருந்ததும், அந்த உறவு சில நாட்களிலேயே முறிந்ததும் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
இதுகுறித்து பேசிய ஹன்சிகா, நான் ஏற்கெனவே ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன். அதை மீண்டும் செய்ய வேண்டாம் என்று நினைத்தபோது தான் இது நடந்தது.
இனிமேல் நான் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் அது நான் திருமணம் செய்துகொள்ளப்போகும் நபராக தான் இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாகவே இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஹன்சிகாவிற்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.