கணவரை பிரிந்தார் ஹன்சிகா மோத்வானி
பிரபல நடிகையான ஹன்சிகா மோத்வானி காதல் கணவர் சோஹேல் கதுரியாவை சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தார்.
மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஹன்சிகா, எங்கேயும் காதல், வேலாயுதம் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில், 2022ம் ஆண்டு பிரபல தொழிலதிபரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார்.

ஜெய்ப்பூர் அரண்மணையில் மிக பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமண வாழ்க்கை தொடங்கி 4 ஆண்டுகளில் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.
இருவருக்கும் விவாகரத்து வழங்கி மும்பை பாந்த்ரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கணவர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம் என கூறிவிட்டாராம் ஹன்சிகா மோத்வானி.
திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததால் பிரிந்து விட்டதாக ஹன்சிகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
